பூசனிக்காய் மோர்க்குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. வெள்ளைப் பூசனிக்காய்- 1 துண்டு (200 கிராம்)
2. தயிர் - 200 மி.லி.
3. தேங்காய்- 1/4 கப்
4. பச்சைமிளகாய்- 3 எண்ணம்
5. சீரகம்- 1/2 தேக்கரண்டி
6. கடுகு - 1/2 தேக்கரண்டி
7. கருவேப்பிலை - சிறிது
8. எண்ணெய்- தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. வெள்ளைப்பூசனிக்காயைச் சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2. தேங்காய், சீரகம், பச்சைமிளகாய் சேர்த்து அவற்றை விழுதாக அரைத்து வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
4. தாளிசத்துடன் நறுக்கி வைத்த வெள்ளைப்பூசனித் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
5. காய் பாதி வெந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்க்கவும்.
6. காய் வெந்த பின்பு அதில் தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.