அப்பளக் குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. புளி - நெல்லிக்காய் அளவு
2. பூண்டு - 10 பற்கள்
3. சின்ன வெங்காயம்-10 எண்ணம்
4. உளுந்து அப்பளம் - இரண்டு எண்ணம்
5. மிளகாய் வற்றல் - 1 எண்ணம்
6. சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
7. கடுகு- 1/4 தேக்கரண்டி
8. கடலைப்பருப்பு - 1/4 தேக்கரண்டி
9. வெந்தயம்- 1/4 தேக்கரண்டி
10. நல்லெண்ணெய் - தேவையான அளவு
11. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்துக் கொள்ளவும்.
2. பூண்டு, வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், மிளகாய் வற்றல் போட்டுத் தாளிக்கவும்.
4. அத்துடன் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
5. பின்னர் அதில் அப்பளத்தை துண்டுகளாக்கிப் போடவும்.
6. மேலும் அதில் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.
7. கடைசியாக கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலைச் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.