கத்தரிக்காய் புளிக்குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. புளி - எலுமிச்சை அளவு
2. தக்காளி - 3 எண்ணம்
3. சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
4. மசாலாத்தூள் - 3 தேக்கரண்டி
5. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
6. கத்தரிக்காய் - 3 எண்ணம்
7. தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி
8. கடுகு - 1/2 தேக்கரண்டி
9. கறிவேப்பிலை - சிறிது
10. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதில் புளியை ஊற வைத்துக் கொள்ளவும்.
2. தக்காளி, வெங்காயம், மிளகாய், கத்தரிக்காய்களை நறுக்கிக் வைக்கவும்.
3. தேங்காய்த்துருவலை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலையுடன் நறுக்கிய வெங்காயம், கத்தரிக்காய், மிளகாய் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
5. அதன் பின்பு தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
6. புளியை நன்றாகக் கரைத்து அந்தத் தண்ணீரை வதக்கிய கலவையுடன் சேர்க்கவும்.
7. இந்தக் கலவையுடன் மசாலாத்தூள் சேர்த்துச் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
8. அதனுடன் அரைத்த தேங்காய் விழுது மற்றும் உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
9. குழம்பை நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.