தக்காளி ரசம்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. தக்காளி - 100 கிராம்
2. புளி - 50 கிராம்
3. துவரம் பருப்பு (வேகவைத்தது) - 1/2 கப்
4. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
5. ரசப்பொடி - 2 தேக்கரண்டி
6. உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க வேண்டிய பொருட்கள்:
1. நல்லெண்ணை - 1/2 தேக்கரண்டி
2. கடுகு - ஒரு தேக்கரண்டி
3. பெருங்காயப்பொடி - 1/4 தேக்கரண்டி
4. பூண்டு - சிறிது
5. கருவேப்பிலை - தேவையான அளவு
6. மல்லித்தழை - தேவையான அளவு
செய்முறை:
1.தக்காளியைக் கைகளால் பிசைந்து அத்துடன் புளியை இரண்டு டம்ளர் தண்ணீரில் கரைத்து மஞ்சள் தூள், உப்பு தூள், ரசப்பொடி ஆகியவைகளைச் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
2. வேகவைத்த பருப்பை நன்கு மசித்துச் சேர்த்து தேவைக்கு மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து இலேசாகக் கொதிக்கவிட வேண்டும்.
3.கடைசியாகத் தாளிக்கத் தேவையான பொருட்களைக் கொண்டு கருவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து இறக்கி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.