மொச்சைக் குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. காய்ந்த மொச்சை – 1/2 கப்
2. புளி – 50 கிராம்
3. சாம்பார் பொடி – 1 தேக்கரண்டி
4. தேங்காய்த் துருவல் – 2 தேக்கரண்டி
5. கடுகு - 1/4 தேக்கரண்டி
6. பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
7. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
8. கறிவேப்பிலை - சிறிது
9. மல்லித்தழை – சிறிது
10. எண்ணெய் - தேவையான அளவு
11. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. முதல் நாள் இரவில் மொச்சையை ஊற வைக்கவும்.
2. ஊற வைத்த மொச்சையிலிருந்து தண்ணீரை வடிகட்டிப் பின்னர் வேக வைத்துத் தனியாக எடுத்து வைக்கவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும்.
4. வேக வைத்த மொச்சையில் பாதியளவை எடுத்துத் தாளிசத்துடன் சேர்க்கவும்.
5. பிறகு, புளியை ஊற வைத்துக் கரைத்து, அதில் சாம்பார் பொடி, உப்பு போட்டு மொச்சையுடன் சேர்த்து, நன்கு கலந்து கொதிக்க விடவும்.
6. மீதியிருக்கும் மொச்சை, தேங்காய்த் துருவல் சேர்த்து அரைத்துச் சேர்க்கவும்.
7. எல்லாம் ஒன்றாக நன்றாகக் கலந்து கொதித்ததும், மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.