மோர் ஓம ரசம்
சுபஸ்ரீஸ்ரீராம்
தேவையான பொருட்கள்:
1. மோர் - 2 கப்
2. கல் உப்பு - தேவையான அளவு
3. மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
4. அரிசிமாவு - 1 தேக்கரண்டி
தாளிக்க
5. கடுகு - 1 தேக்கரண்டி
6. துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
7. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
8. கறிவேப்பிலை - 10 இலைகள்
9. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
10. ஓமம் - 1 தேக்கரண்டி.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் மோரை ஓரளவு நீர்க்க கரைத்துக் கொள்ளவும். அதனுடன் மஞ்சள்பொடி, அரிசிமாவு, உப்பு சேர்க்கவும்.
2. ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, துவரம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
3. பின்னர் அதில் மோர்க்கரைசலை ஊற்றி, ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
4. மீதி உள்ள எண்ணெய்யில் ஓமத்தைத் தாளித்து மோர் ரசத்தில் சேர்க்கவும்.
முக்கியக் குறிப்பு
1. இந்த ரசத்திற்குத் துவரம்பருப்பு மட்டும்தான் தாளிக்கணும்.
2. தயிர் இருந்தால், நன்கு நீர்க்க கடைந்து கொள்ளவும்.மோர் ரசம் தயாரித்த பின், மீண்டும் சுட வைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் மோர் ரசம் திரிந்துவிடும். அதனால் மோர்க் கரைசலைத் தயார் செய்து கொள்ளவும்.
3. சாப்பிடுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு தயார் செய்து விட்டால், சூடான சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.