மொளகூட்டல்
சுபஸ்ரீஸ்ரீராம்
தேவையான பொருட்கள்:
1. முருங்கைக்காய் - 3 எண்ணம்
2. பாசிப்பருப்பு - 50 மில்லி
3. தேங்காய் எண்ணெய் - 3 பெரிய மேசைக் கரண்டி
அரைக்க வேண்டிய பொருட்கள்:
1. உளுத்தம் பருப்பு - 2 சிறிய மேசைக் கரண்டி
2. பெருங்காயம் - ஒரு சிறிய கட்டி
3. வரமிளகாய் - 2 எண்ணம்
4. மிளகு - ஒரு சிறிய மேசைக் கரண்டி
5. சீரகம் - அரை மேசைக் கரண்டி
6. தேங்காய் துருவல் - அரை மூடி
7. உப்பு - தேவையான அளவு
தாளிக்க வேண்டிய பொருட்கள்:
1. கடுகு - ஒரு சிறிய மேசை கரண்டி
2. உளுத்தம் பருப்பு - ஒரு சிறிய மேசை கரண்டி
3. கறிவேப்பிலை - 10 இலைகள்
செய்முறை:
1.முதலில் முருங்கையை சிறிய துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவும். பின்னர் பருப்பை நன்கு குழைவாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
2. ஒரு பெரிய மேசைக் கரண்டி தேங்காய்த் துருவலை எண்ணெய் விட்டு வறுத்து தனியே வைக்கவும்.
3. அரைக்க கொடுத்துள்ள சாமான்கள் அனைத்தையும் நைசாக அரைக்கவும்.
4. வெந்த காயில், பருப்பு, அரைத்த பொருட்களைச் சேர்த்து ஒரு கொதிவந்தவுடன் இறக்கி வைக்கவும்.
5. தாளிக்க வேண்டியதைத் தாளித்து, வறுத்த தேங்காயையும் சேர்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.