புளியில்லா சாம்பார்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. துவரம்பருப்பு- 1 கப்
2. கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
3. பெரிய வெங்காயம் - 2 எண்ணம்
4. தக்காளி - 3 எண்ணம்
5. துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
6. கடுகு - 1/2 தேக்கரண்டி
7. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
8. மல்லி - 2 தேக்கரண்டி
9. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
10. பெருங்காயம் - சிறிதளவு
11. மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
12. உப்பு - தேவையான அளவு
13. எண்ணெய் : தேவையான அளவு
14. கருவேப்பிலை - சிறிது
15. மல்லித்தழை - சிறிது.
செய்முறை:
1. துவரம் பருப்பைத் தனியாக வேகவைத்து எடுத்து வைக்கவும்.
2. ஒரு வாணலியில், சிறிதளவு எண்ணைய் விட்டு கடலை பருப்பு, மல்லி, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டுப் பொன்னிறமாக வறுத்து வைக்கவும்.
3. வறுத்து வைத்தது ஆறிய பிறகு, அதனுடன் தேங்காய் சேர்த்து சொரசொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
4. வெங்காயம், தக்காளியை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
5. ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, வெந்தயம் போட்டுத் தாளித்துக் கொள்ளவும்.
6. பிறகு அதில் நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி, கருவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும்.
7. அதில் தேவைக்கேற்பத் தண்ணீர் சேர்த்து, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்க விடவும்.
8. சிறிது கொதி வந்தவுடன் அரைத்து வைத்த விழுதினைப் போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
9. பிறகு வேகவைத்த துவரம் பருப்பினைப் போட்டு நன்றாகக் கொதி வந்தவுடன் இறக்கி, மல்லித் தழைகளை மேலே தூவி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.