உருளைக்கிழங்கு - பட்டாணி குருமா
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
2. பட்டாணி - 200 கிராம்
3. இஞ்சி - சிறு துண்டு
4. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
5. வெங்காயம் - 1 எண்ணம்
6. தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
7. மஞ்சள்பொடி - 1/4 தேக்கரண்டி
8. மல்லித்தழை - சிறிது
9. எலுமிச்சைச் சாறு - 1/4 தேக்கரண்டி
10. உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
11. கடுகு - 1/4 தேக்கரண்டி.
12. உளுந்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி
13. எண்ணெய் - தேவையான அளவு
குறிப்பு:
பச்சை பட்டாணியாக இருந்தால் தோல் நீக்கிக் கொள்ளவும். உலர்ந்த பட்டாணியாக இருந்தால் முதல்நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
1. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு உளுந்தம் பருப்பு போட்டுப் பொன்னிறமாக வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும்.
2. பின்பு அந்த வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கி வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் பெரிய துண்டுகளாக வெட்டிய உருளைக்கிழங்கு, பட்டாணி, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
4. வதக்கிய வெங்காயம், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், தோல் நீக்கிய இஞ்சி சேர்த்து விழுது போல் அரைக்கவும்.
5. வேக வைத்த உருளை, பட்டாணியுடன் அரைத்து வைத்த விழுது, உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
6. கடைசியாக அதில் மல்லித்தழை தூவி, எலுமிச்சை சாறு கலந்து இறக்கி வைக்கவும்.
குறிப்பு: இந்தக் குருமா சப்பாத்தி, பூரியுடன் சாப்பிடச் சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.