கருணை வத்தக் குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கருணைக்கிழங்கு - 100 கிராம்
2. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
3. கடுகு - 1/4 தேக்கரண்டி
4. உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
5. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
6. கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
7. தேங்காய் துண்டுகள் - 1 கப்
8. குழம்பு தாளிக்கும் வடாம் - சிறிது
9. அரிசி மாவு - 1 தேக்கரண்டி
10. பெருங்காயம் - சிறிது
11. புளி - எலுமிச்சங்காய் அளவு
11. கறிவேப்பிலை - சிறிது
12. மல்லித்தழை - சிறிது
13. எண்ணெய் - தேவையான அளவு
14. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. கருணைக்கிழங்கை வேகவைத்து அதன் தோலை உரித்து, நறுக்கி வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், ஆகியவற்றுடன் மிளகாய்வற்றலை இரண்டாகக் கிள்ளிப் போடவும். அத்துடன் கடலைப் பருப்பையும் சேர்த்துச் சிவக்க வறுக்கவும்.
3. அதனுடன் தேங்காய்த் துண்டு, கறிவேப்பிலை சேர்த்துச் சிறிது வறுத்துக் கொள்ளவும்.
4. அதில் புளிக்கரைசலை ஊற்றி, வேகவைத்த கருணைக்கிழங்கு துண்டுகள், தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
5. நன்றாகக் கொதித்து வற்றிய பின்பு அதில் அரிசி மாவைக் கரைத்து விடவும்.
6. குழம்பு நன்கு கொதித்தபின் கீழே இறக்கி வைக்கவும்.
7. ஒரு வாணலியில் வடாத்தை வறுத்துக் குழம்பில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.