இளநீரில் 10 வகைகள் உள்ளன. ஒவ்வெரு இளநீருக்கும் தனிதனி மருத்துவக் குணங்கள் இருப்பதாக சித்தர்கள் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 7 வகையான இளநீர்கள் மட்டுமே தற்போது கிடைக்கின்றன
1. அடுக்கு இளநீர்
2. ஆயிரம் காய்ச்சி இளநீர்
3. கருவிள நீர்
4. குண்டற்கச்சி இளநீர்
5. கெவுளிபாத்திரை இளநீர்
6. கேளி இளநீர்
7. செவ்விளநீர்
8. சோரியிளநீர்
9. பச்சை இளநீர்
10. மஞ்சள் கச்சி இளநீர்.
அடுக்கு இளநீர்
தென்னை மரத்தில் குலைகளில் இளநீர் காய்கள் அடுக்கடுக்காகக் காணப்படும். அடுக்கு இளநீர் உண்டால் கம்பம் குறைவதனால் ஏற்படும் உடல் சூடு வறட்சி, மூட்டுகளில் ஏற்படும் பசைத்தன்மைக் குறைபாடு, தோல் வறட்சி நீங்கும். இதை உறங்குவதற்கு முன் உண்டால் கபதோஷம், மலப்பை பற்றிய கிருமியும் போகும். உடல் நலம் உண்டாகும்.
ஆயீரம் காய்ச்சி இளநீர்
தென்னை மரத்தில் குலைகளில் காய்கள் மிக சிறிய அளவிலும், நெருக்கமாகவும் இருக்கும். ஆயீரம் காச்சி இளநீர் குடிப்பதால் உடல் வெப்பம், பசியும் அதிகரிக்கும், வாதம், கபம், சீழ் பிடித்த புண்கள் ஆகியவை தீரும்.
கருவிளநீர்
இவ்விள நீர் கருமை நிறத்தில் இருக்கும் இதனால் கபம் அதிகமும், புழு நெளிகின்ற புண்களும், சொறி சொரங்கு மற்றும் தோல் சார்ந்த நோய்கள் நீங்கும். உடல் பொழிவடையும், மன மகிழ்ச்சி உண்டாகும்.
குண்டற்கச்சி இளநீர்
குண்டற்கச்சி இளநீரால் அருசி, விதாகம், நாட்பட்ட பழைய மலம் ஆகியவை நீங்கும்.
கெவுளிபாத்திரை இளநீர்
கௌரி பாத்திரை இளநீர் தாகம், பித்தம், உடல் எரிச்சல் முதலியவை தீரும். மேலும் பசி அடங்கும்.
கேளி இளநீர்
கேளி இளநீரை உண்பவர்களுக்கு ரத்த மேகம், மலக்கிருமி, மந்தாகினி, கரப்பான், அதிசூரம் ஆகியவை நீங்கும்.
செவ்விளநீர்
தினமும் செவ்விள நீரை அருந்தினால் பித்த விருத்தி, தாகம் இளைப்பு அயர்வு பற்பல நோய்கள் நீங்கும்.
சோரி இளநீர்
இவ்விள நீர் இரத்த வண்ணம் உடையது இவ்வகை இளநீரால் வீக்கம் குறையும். வயிற்றிலுள்ள பூச்சிகளும், கண்ணுக்குத் தெரியாதக் கிருமிகளும் அழியும். தெளிந்த குரல் உண்டாகும்.
பச்சை இளநீர்
பச்சை இளநீர் கீழ் பிரமேகம், புராணசுரம், கபம் அதிகம், எரிகிருமி, யானைச்சொரி, கண் நோய் போன்றவை தீரும்.
மஞ்சள் கச்சி இளநீர்
மஞ்சள் கச்சி இளநீர் அருந்தினால் பித்தம் சார்ந்த நோய்கள், வீக்கம். அதிசுரம் ஆகியவை நீங்கும்.