கோடைக்கால உடற்பயிற்சிகள் - உடைகள்
உடற்பயிற்சிகள்
கோடை காலத்தில் பகல் பொழுது அதிகமாக இருக்கும். அதன் காரணமாய் நமது வெளிப்புற பணிகள் அதிகமாக நடைபெற்று உடலில் அதிக கலோரிகள் செலவாகும். எனவேக் கோடைக்காலத்திற்கான சில உடற்பயிற்சிகளை மட்டும் செய்வது உடல் நலத்திற்கு வழி வகுக்கும்.
* நீச்சல் பயிற்சி, அக்வா ஏரோபிக்ஸ், தண்ணீர் ஜாக்கிங், சைக்கிளிங், நடைபயிற்சி, நிழலான இடங்களில் சிறு உடற்பயிற்சிகள், யோகா போன்றவைகள் செய்யலாம்.
* கோடையில் உடற்பயிற்சி செய்ய விரும்புவோர் சூரிய ஒளி அதிகம் படும் இடங்களில் நின்று உடற்பயிற்சி செய்யக்கூடாது.
* கோடைகாலத்தில் பொதுவாகவே இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும். எனவே, அதிகக் கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யக்கூடாது.
* இடைவெளி இல்லாமல் உடற்பயிற்சி செய்யக்கூடாது. உடற்பயிற்சி ஆடைகள் வியர்வை இழுக்காத சிந்தெடிக் ஆடைகளாக இருத்தல் கூடாது.
உடைகள்
கோடைக்காலத்தில் உடல் நலத்தைப் பாதுகாக்க்கும் ஆடைகளை அணிவது உடல் நலத்திற்கு நல்லது.
* கோடைகாலத்திற்கு பருத்தி ஆடை மிகவும் ஏற்றதாகும்.
* கோடைகாலத்தில் மிகவும் டைட் ஆடைகளை அணியக்கூடாது.
* பருத்தியாலான புடவைகளை அணிய வேண்டும்.
* கோடைக்காலத்தில் கருப்பு நிற ஆடைகளை அணியக்கூடாது. ஏனெனில் கருப்பு நிறம் எளிதாக வெப்பத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது.
* லினன் மற்றும் சணல் இழை ஆடைகள் அணியலாம்.
* தளர்வான, மென்மையான நிறங்களை கொண்ட ஆடைகள் அணியலாம். கோடையில் வெள்ளைநிற ஆடைகளை அணிவதே நல்லது.
- மாணிக்கவாசுகி செந்தில்குமார், பெரியகுளம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.