* நாள்தோறும் ஏதாவது ஒரு கீரை வகை சேர்த்துக் கொள்ளலாம்.
* ABC ((ஆப்பிள், பீட்ரூட், கேரட்) சாறு, நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிடலாம்.
* முருங்கைக் கீரை சூப், முருங்கைக் கீரை பொரியல் உண்ணலாம்.
* நாள்தோறும் கருப்புத் திராட்சை இரண்டினை இரவில் ஊற வைத்து, மறுநாள் அதைச் சாப்பிட்டு, அதனை ஊற வைத்தத் தண்ணீரையும் சேர்த்து அருந்தலாம்.
* அசைவம் உண்பவர்களெனில், ஆட்டின் சுவரொட்டி, ஈரல் ஆகியவற்றை வாரம் ஒரு முறையோ, இரண்டு முறையோ உணவில் சேர்க்கலாம்.
* அத்திப்பழம், மாதுளை பழங்கள் உண்ணலாம்.
* கருப்பட்டிக் காபி பருகலாம்.
* சுத்தமான தேனில் பேரிச்சைப் பழம் ஊற வைத்து நாள்தோறும் 2 எனும் அளவில் சாப்பிடலாம்.
* பீட்ரூட் பொரியல், பீட்ரூட் சாறு, பீட்ரூட் பச்சடி என பீட்ரூட்டை அதிக அளவில் சேர்த்து கொள்ளலாம்.
* வெள்ளைச் சீனி தவிர்ப்பது நல்லது.
* புளிப்புச் சுவையுடையவற்றைக் குறைக்கலாம்.