* முட்டைக்கோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
* சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும்.
* காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மணமும் போய்விடும்.
* கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.
* தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க, இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
* கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது.
* இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
* உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றிச் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
* வற்றல் குழம்பு வைக்கும் போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனைத் தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.
* வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கி மோர் கலந்த நீரில் வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும். கரையும் பிடிக்காது. அதில் உள்ள துவர்ப்பும் நீங்கி விடும்.
* பாகற்காயைச் சமைப்பதற்கு முன்னால் அரைமணி நேரம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால் அதன் கசப்பு போய்விடும்.
* வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைதால், நான்கு நாட்கள் வரை கருக்காமல் அப்படியே இருக்கும்.
* தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு மொறுப்பாக வரும்.
* கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்துவிடாமல் இட்லிப் பானையில் அடியில் தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டு இட்லி வேக வைத்தால் வாசனையாக இருக்கும்.
* வறுத்த வெந்தயத்தைச் சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.
* கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
* சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.
* பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல், காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் பழுக்காமலும், காயாமலும் இருக்கும்.