* சமைக்கும்போது கீரையைத் தவிர எது, சமைத்தாலும் பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும்.
* ரவை தோசை செய்யும் போது 2 மேசைக்கரண்டி கடலை மாவு சேர்த்தால் தோசை சிவந்து மொறுமொறுப்பாக வரும்.
* காய்கறி சாலட் செய்யும் போது, ஒரு கிண்ணம் பாசிப் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவை த்து, சாலட்டில் போட்டால் சுவையாக இருக்கும்.
* பூரி மாவில் தண்ணீருக்குப் பதில் பால் சேர்த்து பிசைந்து ஊற வைத்தால் சுவையாக இருக்கும்.
* முருங்கைக்காய் மற்றும் வாழைக்காயை பிரிட்ஜில் வைக்கும் போது பேப்பரில் சுற்றி வைத்தால் வாடாமல் அப்படியே இருக்கும்.
* மோர்க்குழம்புக்கு அரைக்கும் கலவையுடன் ஒரு தேக்கரண்டி கடுகையும் சேர்த்து அரைத்து மோர்க்குழம்பு செய்தால், வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.
* இட்லி மாவிற்கு உளுந்து அரைக்கும் போது, உளுந்துடன் ஐஸ் கட்டி இரண்டு துண்டு சேர்த்து அரைத்தால், வழக்கத்தை விட இட்லி மென்மையாக இருக்கும்.
* முட்டை கெடாமல் இருக்க, முட்டையின் மீது லேசாக எண்ணெய் தடவி வைக்கலாம்.
* மோர்க் குழம்பை இறக்கியவுடன் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்தால் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.
* உள்ளங்கையில் சமையல் எண்ணெய் சில சொட்டு ஊற்றி மீனைச் சுத்தம் செய்தால் கைகளில் மீன் வாடை இருக்காது.
* மீன் குழம்பு செய்யும் போது வெந்தயம், பெருங்காயம் இரண்டையும் வறுத்துப் பொடி செய்து குழம்பில் சேர்த்தால் குழம்பு மணமாக இருக்கும்.
* பாத்திரங்கள் பளபளக்க உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் கழுவலாம்.
* காய்ந்த சிவப்பு மிளகாயை வறுக்கும் போது நெடி வராமல் இருக்க, சிறிது உப்பு போட்டு வறுக்கவும்.
* வாணலியை சூடாக்கி பின்பு அதில் சாம்பார் வெங்காயத்தை போட்டு சூடு வர புரட்டினால் தோல் சுலபமாக உரிந்து வரும்.
* சாம்பார் செய்வதற்கு பருப்பு வேகவைக்கும் போது நெய் சேர்த்தால் சாம்பார் ருசியாக இருக்கும்.
* பீர்க்கங்காய் சமைக்கும் போது தோலை முற்றிலுமாக சீவாமல், கூர்மையான பகுதியை மட்டும் சீவி தோல்லுடன் நறுக்கி கூட்டு செய்தால் சுவையும் சத்தும் கிடைக்கும்.
* எலுமிச்சை பழத்தை உப்பு ஜாடியில் வைத்தால் பழம் வாடாமல் இருக்கும்.கறிவேப்பிலையை அலுமினிய பாத்திரத்தில் போட்டு மூடி பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் வாடாமல் இருக்கும்.
* பால் பாயசம் செய்யும் போது பாதாம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயசம் சுவையாக வரும்.
* மோர்க் குழம்பு செய்யும் போது மோர் அல்லது தயிருடன் ஒரு தேக்கரண்டி கடலைமாவை சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து ஊற்றி கொதிக்கவிட்டால், மோர் குழம்பு திரிந்து போகாமல் சுவையாக இருக்கும்.