ரவா தோசை
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. ரவை - 400 கிராம்
2. அரிசி மாவு - 1 மேசைக் கரண்டி
3. மைதா மாவு - 1 மேசைக் கரண்டி
4. மிளகு - 1 தேக்கரண்டி
5. சீரகம் - 1 தேக்கரண்டி
6. கடுகு - 1 தேக்கரண்டி
7. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
8. எண்ணெய் - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு
10. கொத்துமல்லி - சிறிதளவு
11. கறிவேப்பிலை - சிறிதளவு
12. பச்சை மிளகாய் - சிறிதளவு
13. இஞ்சி - சிறிதளவு
செய்முறை:
1. புளித்த மோரில் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும்.
2. நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி, இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை மோரில் சேர்க்கவும்.
3. அதனுடன் வறுத்த ரவை, மைதா மாவு, அரிசி மாவு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.
4. வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெயைக் காய வைத்து அதில் மிளகு, சீரகம், கடுகு ஆகியவை சேர்த்து தாளித்து, பெருங்காயம் சேர்த்துக் கலந்து வைத்த மாவில் சேர்க்கவும்.
6. தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், மெலிதான தோசைகளாக வார்க்கலாம்.
கவனத்திற்கு:
1. மாவை அதிக நேரம் ஊற வைத்தால் தோசை மொறுமொறுப்பாக வராது.
2. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி மாவில் சேர்த்துத் தோசை சுட்டால் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.