பாசிப்பருப்பு தோசை
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பாசிப்பருப்பு - 1 கப்
2. பச்சரிசி - 1/4 கப்
3. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
4. மல்லித்தழை - சிறிதளவு
5. உப்பு - தேவையான அளவு
6. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. பாசிப்பருப்பு, பச்சரிசியை தனித்தனியாக 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. ஊறிய அரிசியை முதலில் லேசாக அரைத்து, பிறகு பாசிப்பருப்பு, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும்.
3. அடுப்பில் தோசைக்கல்லைப் போட்டுக் காய்ந்ததும் மாவை ஊற்றி, அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு தோசைகளாக சுட்டு எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.