சாம்பார் இட்லி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. துவரம்பருப்பு - 1/2 கப்
2. தக்காளி - 1 எண்ணம்
3. வெங்காயம் - 1எண்ணம்
4. புளி - சிறிது
5. மல்லித்தழை - சிறிது
6. இட்லி மாவு - 1 கப்
7. உப்பு - தேவையான அளவு
8. எண்ணெய் - தேவையான அளவு
வறுத்து அரைக்க
9. மல்லி - 1 தேக்கரண்டி
10. தேங்காய்த் துருவல் - 1 தேக்கரண்டி
11. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
12. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
13. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
14. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
15. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்.
செய்முறை:
1. துவரம்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
2. புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்துத் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
4. அந்தக் கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும்.
5. அத்துடன் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
6. கொதித்து வரும் போது, அரைத்து வைத்த மசாலாவைச் சேர்த்துக் கலக்கவும்.
7. அதனுடன் வேகவைத்த துவரம் பருப்பு, மல்லித்தழை தூவி நன்றாகக் கொதித்து வந்ததும் இறக்கவும்.
8. இட்லி மாவை சிறு சிறு இட்லிகளாக வார்த்து வேகவைத்து எடுக்கவும்.
9. ஒரு கிண்ணத்தில் வேகவைத்த சிறிய இட்லிகளைப் போட்டு அதன் மேல் சாம்பாரை ஊற்றிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.