திணை அடை
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. தினை மாவு – 1 கப்
2. கடலைப்பருப்பு - 1/4 கப்
3. உளுந்து – 1/4 கப்
4. வெங்காயம் – 2 எண்ணம்
5. பச்சை மிளகாய் – 4 எண்ணம்
6. தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டி
7. கடுகு - 1/2 தேக்கரண்டி
8. கறிவேப்பிலை – சிறிது
9. மல்லித்தழை – சிறிது
10. எண்ணெய் - தேவையான அளவு
11. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. கடலைப்பருப்பு, உளுந்து இரண்டையும் தனித்தனியாக ஊற வைக்கவும். ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் இரண்டையும் கழுவி ஒன்றாக மாவு போல் அரைத்துக் கொள்ளவும்.
2. அரைத்த மாவினைத் தினை மாவுடன் சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்தது, அதில் கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டுத் தாளித்துக் கொள்ளவும்.
4. தாளிசத்தை அடை மாவில் சேர்த்துக் கலக்கவும்.
5. பின்பு மாவில் தேங்காய் துருவல். உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
6. இந்த மாவைத் தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் சிறிதளவு எண்ணெய் விட்டுச் சுட்டு எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.