கோதுமை தோசை
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கோதுமை மாவு – 150 கிராம்
2. அரிசி மாவு – 30 கிராம்
3. மைதா மாவு – 75 கிராம்
4. எண்ணெய் – தேவையான அளவு
5. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, அரிசி மாவு, உப்பு அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் தோசை மாவு பதத்திற்கு நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
2. இந்த மாவை அரை மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.
3. பிறகு தோசைக் கல்லில் மாவை ஊற்றி சுற்றிலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, தோசை நன்கு சிவந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.