வரகு இட்லி
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. வரகு - 2 கப்
2. உளுத்தம் பருப்பு - 2 கப்
3. வெந்தயம் - 2 தேக்கரண்டி
4. உப்பு தேவையான அளவு
செய்முறை:
1. வரகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை நன்கு கழுவி, தனித்தனியே ஊற வைக்கவும்.
2. ஊறிய உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு நீர் சேர்த்து மென்மையாக அரைத்து, ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
3. வரகினை மிக்ஸியில் போட்டு நீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கிப் 10 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
4. புளித்த மாவினை இட்லிச் சட்டியில் ஊற்றி இட்லியாக எடுக்கவும்..
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.