மரவள்ளிக்கிழங்கு தோசை
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. மரவள்ளிக்கிழங்கு -250 கிராம்
2. பச்சரிசி -250 கிராம்
3. வெந்தயம் -1 தேக்கரண்டி
4. சீரகம் -1 தேக்கரண்டி
5. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
செய்முறை:
1. பச்சரிசியை நன்கு கழுவி, அதனுடன் வெந்தயம் சேர்த்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
2. மரவள்ளிக்கிழங்கு தோல் நீக்கிப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. அரிசி, சீரகம், வெந்தயம், பச்சைமிளகாய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
4. மரவள்ளிக் கிழங்கையும் அரைத்து மாவுடன் சேர்த்துக்கலக்கவும்.
5. அதிக நேரம் புளிக்க வைக்கத் தேவையில்லை. மூன்று மணி நேரம் வைத்துப் பின்னர் தோசை வார்க்கலாம்.
6. தோசை மாவு நீர்க்க வைத்துக் கொள்ளவும்.
7. தோசைக்கல் நன்கு சூடான பிறகு ஒரு கரண்டிமாவு எடுத்து மெல்லிய தோசையாக வார்த்தெடுக்கவும்.
8. தோசைக்கு விருப்பத்திற்கேற்ப எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.