சிவப்பு அரிசி ஆப்பம்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. சிவப்பு அரிசி - 1/2 கிலோ
2. தேங்காய் - 1 எண்ணம்
3. தேங்காய்த் துருவல் - 2 கப்
4. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
5. வெல்லம் - சிறிய துண்டு
6. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. சிவப்பு அரிசியை நன்றாகக் கழுவி 4 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் தேங்காய்த் துருவல், வெல்லம், வெந்தயம் சேர்த்துக் கிரைண்டரில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
2. அரைத்த மாவைச் சிறிது உப்பு சேர்த்துக் கலந்து புளிக்க விடவும்.
3. தேங்காயைத் துருவிப் பால் எடுத்து கொள்ளவும்.
4. ஆப்பச் சட்டியை அடுப்பில் வைத்து மாவை ஊற்றி, சட்டியைக் கையால் பிடித்து மாவைச் சுற்றிப் பரவவிட்டு மூடி வைக்கவும்.
5. ஒரு நிமிடம் கழித்து திறந்தால் சுவையான ஆப்பம் ரெடி.
குறிப்பு:
* சுவையான சத்தான இந்த ஆப்பத்தை தேங்காய் பாலுடன் பரிமாறவும்.
* தேங்காய் பால் பிடிக்காதவர்கள், குருமா, பாயா வைத்து சுவைக்கலாம்
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.