ஓட்ஸ் தோசை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. ஓட்ஸ் - 1 கப்
2. கடலைமாவு - 1/4 கப்
3. ரவை - 1/4 கப்
4. புளிக்காத மோர் - 2 கப்
5. சிறிய வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 1/4 கப்
6. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
7. மிளகு - 1/2 தேக்கரண்டி
8. சீரகப்பொடி - 1 தேக்கரண்டி
9. பெருங்காயம் - 1 சிட்டிகை
10. முந்திரி பருப்பு (உடைத்தது) - 1 மேசைக்கரண்டி
11. உப்பு - தேவையான அளவு
12. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. ஓட்ஸை மிக்ஸியில் போட்டுப் பொடிக்கவும்.
2. மோரில் ஓட்ஸ்மாவு, கடலை மாவு, ரவை, உப்பு சேர்த்துக் கரைக்கவும்.
3. அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு சீரகப்பொடி, பெருங்காயம், முந்திரித் துண்டுகள் சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
4. அந்த மாவைச் சூடான தோசைக்கல்லில் மெல்லியதாகச் சுட்டு எடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.