இடியாப்பம்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. புழுங்கல் அரிசி – 500 கிராம்
2. தேங்காய்த் துருவல் – 1/4 கோப்பை
3. தேங்காய் (பால் செய்ய) – 1 மூடி
4. சர்க்கரை – 250 கிராம்
5. ஏலக்காய் – 2 அல்லது 3 எண்ணம்
6. உப்பு – 1/4 தேக்கரண்டி
7. நல்லெண்ணெய் – 1/4 தேக்கரண்டி
செய்முறை 1:
1. அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
2. பிறகு ஊறிய அரிசியை நன்றாக கழுவி அதனுடன் துருவிய தேங்காயைப் போட்டு அதனை மைய அரைத்தெடுக்கவும்.
3. மாவுடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லி தட்டில் நல்லெண்ணெய் தடவி இட்லியாக வார்க்கவும்.
4. இட்லியை சூடு ஆறுவதற்குள் இடியாப்ப குழலில் இட்டு பிழிந்து எடுக்கவும்.
செய்முறை 2:
1. அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
2. பிறகு ஊறிய அரிசியை நன்றாக கழுவி அதனுடன் துருவிய தேங்காயைப் போட்டு, உப்பு சேர்த்து அதனைக் கெட்டியாக அரைத்தெடுக்கவும்.
3. கெட்டியாக உள்ள மாவை இடியாப்ப குழலில் இட்டு இட்லித் தட்டில் நல்லெண்ணெய் தடவிப் பிழிந்து எடுக்கவும்.
4. இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லியைப் போல் வேக வைத்து எடுக்கவும்.
தேங்காய்ப்பால் செய்முறை:
1. தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
2. இதனுடன் சர்க்கரை, ஏலக்காய் போட்டு, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து வடிகட்டி பால் எடுக்கவும்.
3. பிறகு மீண்டும் தண்ணீர் சேர்த்து அரைத்து இரண்டாம் முறையும் பால் எடுக்கவும்.
4. பாலில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலக்கி இடியாப்பத்துடன் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.