உளுத்தம் சுவாலை
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. வறுத்த அரிசி மாவு - 1 கப்
2. வறுத்து அரைத்த உளுந்து மாவு - 1/2 கப்
3. வறுத்த பாசிப்பருப்பு - 4 மேசைக்கரண்டி
4. பனை வெல்லம் - 1/4 கப்
5. வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
6. தேங்காய்த் துருவல் - 1/4 கப்
7. உப்பு - சிறிது
செய்முறை:
1. உளுந்து மாவு, அரிசி மாவு, பாசிப்பருப்பு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு, கையில் ஒட்டாத அளவுக்குப் பிசையவும்.
2. அதை இடியாப்ப அச்சில் இட்டு இட்லித் தட்டில் பிழிந்து, இட்லி சட்டியில் வைத்து 20 நிமிடங்கள் வரை வேக வைத்துக் கொள்ளவும்.
3. பிறகு இந்த இடியாப்பத்தை உதிர்த்து வெண்ணெய், தேங்காய்த்துருவல், பனை வெல்லம் சேர்த்தால், மணம் கமழும் சத்தான உணவு தயார்.
குறிப்பு: இலங்கைத் தமிழர்களிடையே இந்த இனிப்புச் சிற்றுண்டி புகழ் பெற்றது.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.