தோசை சாண்ட்விச்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. தோசைமாவு – 2 கப்
2. உருளைக்கிழங்கு – 2 எண்ணம்
3. நறுக்கிய காய்கறிக்கலவை – 1 கப்
4. மிளகாய்த்தூள் – தேவையான அளவு
5. மல்லித்தழை – சிறிதளவு
6. துருவிய பனீர் – 1/2 கப்
7. உப்பு - தேவையான அளவு
8. எண்ணைய் – தேவையான அளவு
செய்முறை:
1. உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
2. அத்துடன் பொடியாக நறுக்கிய காய்கறிகளை வேக வைத்து சேர்த்துக் கொள்ளவும்.
3. மிளகாய்த்தூள், மல்லித்தழை, பனீர், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
4. தோசை மாவைச் சிறு தோசைகளாக ஊற்றிச் சுற்றி எண்ணைய் ஊற்றி, நன்கு வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.
5. ஒரு தோசையின் மேல் சிறிது காய்கறிக் கலவையை வைத்து, மற்றொரு தோசையால் மூடி சாண்ட்விச் போல் செய்து கொள்ளவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.