புடலங்காய் அடை
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. புடலங்காய் - 1 எண்ணம்
2. புழுங்கலரிசி - 2 கப்
3. பச்சரிசி - 2 கப்
4. கடலைப்பருப்பு -1 கப்
5. துவரம் பருப்பு - 1 கப்
6. உளுத்தம் பருப்பு - 1/4 கப்
7. பாசிப்பருப்பு - 1/4 கப்
8. கொள்ளு - 4 மேசைக்கரண்டி
9. புதினா - 1/4கப்
10. சின்ன வெங்காயம் - 20 எண்ணம்
11. காய்ந்த மிளகாய் - 10 எண்ணம்
12. சீரகம் -1 தேக்கரண்டி
13. தனியா - 4 தேக்கரண்டி
14. பெருங்காயம் - 2 சிட்டிகை
15. பூண்டு - 10 பல்
16. கடுகு - 1தேக்கரண்டி
17. கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
18. கறிவேப்பிலை - சிறிதளவு
19. உப்பு - தேவையான அளவு
20. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. புழுங்கலரிசி, பச்சரிசி, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கொள்ளு ஆகிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. அரிசி நன்கு ஊறியதும் அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, சீரகம், தனியா, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு ரவை பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
3. புடலங்காய், வெங்காயம், மிளகாய் போன்றவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
4. நறுக்கிய சின்ன வெங்காயம், புதினா, பொடியாக நறுக்கிய புடலங்காய், அதனுள்ளே இருக்கும் விதை மற்றும் சதைப்பகுதி ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, அதனுடன் அரைத்து வைத்துள்ள புடலங்காய்க் கலவையைச் சேர்த்துக் கெட்டியாகக் கலக்கிக் கொள்ளவும்.
6. ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்துச் சூடானதும், அதில் எண்ணெயை தடவி, கலக்கி வைத்துள்ள மாவுக் கலவையில் இருந்து ஒரு கரண்டி மாவை எடுத்து மொத்தமாக ஊத்தாப்பம் போல் ஊற்றி மூடி வேகவைக்கவும்.
7. ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு, தோசையை சிவக்க வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: இந்த அடையைத் தேங்காய் சட்னியுடன் சேர்த்துச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.