ஆனியன் ரவா தோசை
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. ரவை – 250 கிராம்
2. மைதா – 50 கிராம்
3. தோசை மாவு – தேவையான அளவு
4. பெரிய வெங்காயம் – 100கிராம்
5. பச்சை மிளகாய் – 6 எண்ணம்
6. சீரகம் – 2 தேக்கரண்டி
7. முந்திரிப்பருப்பு (உடைத்தது) – 1 கரண்டி
8. இஞ்சி – 50 கிராம்
9. உப்பு – தேவையான அளவு
10. எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு கிண்ணத்தில் ரவை, மைதா மாவு, சீரகம், உப்பு, முந்திரி, பச்சை மிளகாய், இஞ்சி, சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
2. பிறகு, அதில் தோசை மாவு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
3. கலந்த மாவைத் தோசைக் கல்லில் ஊற்றி மேலே வெங்காயம் பரவலாகத் தூவி, எண்ணெய் சுற்றி ஊற்றி, தோசையைத் திருப்பிப் போடாமல் வெந்ததும் எடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.