வாழைக்காய் கார சப்பாத்தி
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. வாழைக்காய் – 1 எண்ணம்
2. கோதுமை மாவு – 1 கப்
3. எலுமிச்சைச் சாறு – 2 தேக்கரண்டி
4. மல்லி – 2 தேக்கரண்டி
5. காய்ந்த மிளகாய் – 4 எண்ணம்
6. கறிவேப்பிலை – சிறிது
7. எண்ணெய் - தேவையான அளவு
8. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. வாழைக்காயைத் தோலுடன் வேக வைத்து, பிறகு தோலை உரித்து மசித்துக் கொள்ளவும்.
2. மல்லி, காய்ந்த மிளகாயைச் சிறிது எண்ணெயில் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
3. கோதுமை மாவுடன் உப்பு, மசித்த வாழைக்காய், வறுத்துப் பொடித்த மல்லி மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, எலுமிச்சைச் சாறு சேர்த்து, தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
4. பின்னர் சிறிது மாவை எடுத்து மெல்லிய சப்பாத்தியாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும் .
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.