மைசூர் மசாலா தோசை
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. தோசை மாவு - 3 கப்
2. சிகப்பு சட்னி - தேவையான அளவு
3. உருளை மசாலா - தேவையான அளவு
4. நல்லெண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு
சிகப்பு சட்னி செய்ய
5. பூண்டுப்பல் - 10 எண்ணம்
6. வரமிளகாய் - 8 எண்ணம்
7. தக்காளி - 1 எண்ணம்
8. உப்பு - தேவையான அளவு
9. எண்ணெய் - தேவையான அளவு
உருளை மசாலா செய்ய
10. வேகவைத்த உருளை - 2 பெரியது
11. வெங்காயம் - 1 பெரியது
12. பச்சை மிளகாய் - 2
13. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
14. சோம்புத்தூள் - 1 தேக்கரண்டி
15. மல்லித்தழை - சிறிது
16. உப்பு - தேவையான அளவு
17. எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க
18. கடுகு - 18 தேக்கரண்டி
19. உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
20. கறிவேப்பிலை - 1 கொத்து
21. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை:
1. சிகப்பு சட்னி செய்யத் தேவையான பொருட்களில் உப்பை தவிர, மீதமுள்ள பொருட்களை எண்ணெயில் வதக்கி ஆறியதும் உப்பு சேர்த்து நைசாக அரைத்து சிகப்பு சட்னி செய்யவும்.
2. கடாயில் எண்ணெய் விட்டுத் தாளிக்க கொடுத்தவைகளைச் சேர்த்துத் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
3. பின்பு அதில், மஞ்சள்தூள், உப்பு, சோம்புத்தூள், மசித்த உருளை சேர்த்துக் கிளறி தேவையான நீர் சேர்த்து கொதிக்க வைத்துக் கெட்டியனதும் மல்லித்தழை தூவி இறக்கவும்.
4. தோசைகல்லில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி மெலிதாக தேய்த்து சுற்றிலும் நல்லெண்ணெய் / நெய் ஊற்றி வேகவிடவும்.
5. வெந்ததும் சிகப்புச் சட்னியை பரவலாக தடவி அதன்மேல் உருளை மசாலாவை வைத்து மடித்து எடுக்கவும்.
6. மசாலாத் தோசையுடன் சட்னி, சாம்பார் சேர்த்துப் பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.