கேழ்வரகு தோசை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கேப்பை - 3/4 கப்
2. இட்லி அரிசி - 1/4 கப்
3. உளுந்து - 1/4 கப்
4. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. கேப்பை, இட்லி அரிசி, உளுந்து எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. ஊறிய பிறகு அதோடு உப்பு சேர்த்துக் கிரைண்டரில் அரைத்து 5 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
3. மாவு பொங்கி இருக்கும்.
4. அடுப்பில் தோசைக்கல்லை வைத்துச் சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவு எடுத்து ஊற்றி தோசையாக வார்த்து விடவும்.
5. ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப் போடவும்.
6. மறு புறம் வெந்ததும் எடுத்துப் பரிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.