கார்த்திகை அடை
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. புழுங்கலரிசி - 1 கப்
2. பச்சரிசி - 1/2 கப்
3. உளுத்தம் பருப்பு - 1/2 கப்
4. கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி
5. துவரம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
6. மிளகு - 1 மேசைக்கரண்டி
7. சீரகம் - 1தேக்கரண்டி
8. தேங்காய்த் துருவல் - 1/2 கப்
9. தேங்காய்த் துண்டு (பொடியாக நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி
10. உப்பு - தேவையான அளவு
11. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. அரிசியையும், பருப்பையும் 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசி பருப்பை நன்றாகக் கழுவி, தண்ணீரை வடித்து விட்டு, மிக்ஸியில் போட்டு, அத்துடன் மிளகு, சீரகம், உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.
2. மிக்ஸியிலிருந்து மாவை எடுக்கும் முன், தேங்காய்த் துருவலைச் சேர்த்து ஓரிரண்டு சுற்றுகள் ஓட விட்டு எடுக்கவும்.
3. தோசைக்கல்லைக் காயவிட்டு, சிறிது எண்ணெய் விட்டு, ஒரு கை மாவை எடுத்து அடையாகத் தட்டவும்.
4. அதன் மேல் சிறிது தேங்காய்த் துண்டுகளைத் தூவி விடவும்.
5. அடையைச் சுற்றிச் சிறிது எண்ணெய் விட்டுச் சிவக்க வேக விடவும்.
6. அடை ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு, மறுபுறமும் சிவக்க வெந்ததும் எடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.