முருங்கைக்கீரை அடை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. துவரம் பருப்பு - 1/2 கப்
2. கடலைப் பருப்பு - 1/2 கப்
3. உளுத்தம் பருப்பு - 1/2 கப்
4. பயத்தம் பருப்பு - 1/2 கப்
5. பச்சரிசி - 2 கப்
6. இஞ்சி - 1 துண்டு
7. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
8. காய்ந்த மிளகாய் - 4 எண்ணம்
9. முருங்கைக்கீரை - 1 கப்
10. எண்ணெய் - தேவையான அளவு
11. உப்பு - தேவையான அளவு
12. துருவிய தேங்காய் - சிறிது.
செய்முறை:
1. அரிசி, பருப்பு வகையறாக்களை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. அதனுடன் உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும்.
3. பின்னர் அந்த மாவைச் சில மணி நேரம் பொங்க விடவும்.
4. பிறகு தோசைக்கல் காய்ந்ததும், தோசை போல வார்த்து, அதன் மேலே முருங்கைக் கீரையைத் தூவி வேகவிடவும்.
5. அதன் பிறகு தோசையைத் திருப்பிப் போட்டு நன்கு வேகவிடவும்.
6. தோசை பொன்னிறமானதும் எடுத்துப் பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.