வெஜிடபிள் ஊத்தப்பம்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. இட்லி மாவு - 1/2 கிலோ
2. கேரட் துருவல் - 1 கப்
3. முட்டைகோஸ் துருவல் - 1 கப்
4. வெங்காயம் - 100 கிராம்
5. குடமிளகாய் - 100 கிராம்
6. எண்ணெய் - தேவையான அளவு
7. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. துருவிய கேரட், முட்டைகோஸ், நறுக்கிய குடமிளகாய், வெங்காயம் எல்லாவற்றையும் கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கி, உப்பு சேர்க்கவும்.
2. அதனை இட்லி மாவுடன் கலந்து சிறிய தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
குறிப்பு: இத்தோசைக்கு புதினா சட்னி மிகச்சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.