இனிப்பு ராகி தோசை
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கேழ்வரகு மாவு - 250 கிராம்
2. வெல்லம் - 150 கிராம்
3. ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி
4. அரிசி மாவு - 4 தேக்கரண்டி
5. நெய் / எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. வெல்லத்தைப் பொடித்து கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைத்து, கேழ்வரகு மாவுடன் சேர்க்கவும்.
2. அதனுடன் அரிசி மாவு, ஏலப்பொடி சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
3. தோசைக்கல்லில் நெய் / எண்ணெய் விட்டு, அந்த மாவை தோசையாக வார்த்து எடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.