தினை - பச்சைப்பயிறு தோசை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. தினை - 1 கப்
2. பச்சை பயிறு - 1/2 கப்
3. வெந்தயம் - 1 தேக்கரண்டி
4. வெங்காயம் - 6 எண்ணம்
5. மிளகாய் - 2 எண்ணம்
6. புதினா - சிறிது
7. மல்லித்தழை - சிறிது
8. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. தினை, பச்சைப்பயிறு மற்றும் வெந்தயம் மூன்றையும் தனித்தனியாக எட்டு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
2. மூன்றையும் நன்கு சுத்தம் செய்து, தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.
3. தோசை மாவு பதத்திற்கு அரைத்த பிறகு, அந்தக் கலவையுடன் உப்பு சேர்த்து பன்னிரண்டு மணி நேரம் வரை (மாவு புளிக்கும் வரை) வைத்துவிட வேண்டும்.
4. புளித்த தோசை மாவுடன் வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை நறுக்கிச் சேர்க்கவும்.
5. அதனுடன் புதினா, மல்லித்தழைகளைப் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கலக்கவும்.
6. கலக்கிய மாவைத் தோசைக்கல்லில் வார்த்து இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: தினை தோசைக்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி இரண்டுமே சுவையாகத்தான் இருக்கும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.