வரகு – ராகி தோசை
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. வரகு அரிசி – 200 கிராம்
2. கோதுமை – 100 கிராம்
3. ராகி – 100 கிராம்
4. உளுந்து – 2 மேசைக்கரண்டி
5. வெந்தயம் – 2 தேக்கரண்டி
6. நல்லெண்ணெய் – தேவையான அளவு
7. கறிவேப்பிலை – சிறிது
8. மல்லித்தழை - சிறிது
9. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. வரகு அரிசி, ராகி, கோதுமை மூன்றையும் தண்ணீரில் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. வெந்தயம், உளுந்தைத் தனியாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
3. இரண்டையும் தனித்தனியாக அரைத்து, இரண்டு மாவையும் ஒன்றாகக் கலக்கவும்.
4. கலந்த மாவில் உப்பு, நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும்.
5. அதன் பிறகு, மாவைக் குறைந்தது ஐந்து மணி நேரம் வரை புளிக்க வைக்கவும்.
6. தோசைக்கல்லைச் சூடாக்கி, எண்ணெய் தேய்த்து, மாவை தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
குறிப்பு: இத்தோசைக்குக் காரமான சட்னி மிகச்சுவையாக இருக்கும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.