கடலை மாவு தோசை
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கடலை மாவு - 100 கிராம்
2. அரிசி மாவு – 100 கிராம்
3. கோதுமை மாவு – 50 கிராம்
4. பெரிய வெங்காயம் – 1 எண்ணம்
5. மிளகாய் வற்றல் – 3 எண்ணம்
6. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
7. உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
8. தேங்காய்த் துருவல் – 100 கிராம்
9. பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
10. சீரகம் – 1 தேக்கரண்டி
11. எண்ணெய் - தேவையான அளவு
12. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. கடலை மாவு, அரிசி மாவு, கோதுமை மாவு என மூன்றையும் ஒன்றாகச் சேர்த்துத் தேவையான தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.
2. அதனுடன் தேங்காய் துருவலைச் சேர்க்கவும்.
3. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு தாளித்துப் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் வற்றலைச் சேர்த்து வதக்கவும்.
4. அதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், சீரகத்தைச் சேர்க்கவும்.
5. அனைத்தையும் மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
6. தோசைக்கல்லில் மாவை தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு இருபுறமும் நன்கு வேக வைத்து எடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.