தக்காளி தோசை
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 1 1/4 கப்
2. உளுத்தம்பருப்பு - 4 தேக்கரண்டி
3. தக்காளி - 4 எண்ணம்
4. தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
5. சீரகம் - 1 தேக்கரண்டி
6. மிளகாய் வற்றல் - 10 எண்ணம்
7. பெருங்காயம் - சிறிது
8. உப்பு - தேவையான அளவு
9. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. பச்சரிசியையும், உளுத்தம் பருப்பையும் கழுவி இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2. மிளகாயையும் தண்ணீரில் ஊறவிடவும்.
3. தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
4. சீரகம், பெருங்காயம், ஊறிய மிளகாய் ஆகியவற்றை முதலில் அரைத்துக் கொண்டு, பின்னர் பச்சரிசி, தேங்காய், உளுத்தம்பருப்பு சேர்த்து அரைக்கவும்.
5. அரைபட்டதும் தக்காளியையும் போட்டு நன்றாக ஆட்டவும்.
6. பின்னர் உப்பு சேர்த்து, அனைத்தையும் கலக்கி ஒரு மணி நேரம் வைத்திருக்கவும்.
7. அடுப்பில் தோசைக்கல்லை வைத்துச் சூடானதும், மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.
குறிப்பு: தக்காளி தோசைக்கு, மல்லிச்சட்னி சுவையாக இருக்கும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.