அவல் இட்லி
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 1 கப்
2. புழுங்கலரிசி - 1 கப்
3. உளுத்தம்பருப்பு - 1/2 கப்
4. கெட்டி அவல் - 1/2 கப்
5. ஆப்ப சோடா - 1 சிட்டிகை
6. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. பச்சரிசி மற்றும் புழுங்கலரிசையைச் சேர்த்தும், உளுந்து, அவல் ஆகியவற்றைத் தனித்தனியாகவும் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
2. மூன்றும் நன்கு ஊறிய பிறகு, அதனைக் களைந்து, மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும்.
3. அரைத்த மாவுடன் தேவையான உப்பு சேர்த்து 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும்.
4. புளித்த மாவில் ஆப்ப சோடா சேர்த்துக் கலந்து, இட்லித் தட்டில் இட்லிகளாக ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.