கம்பு இட்லி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1.1. கம்பு - 1 கப்
2. புழுங்கலரிசி - 1/2 கப்
3. உளுத்தம்பருப்பு - 1/2 கப்
4. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. கம்பு, அரிசி, உளுந்தம்பருப்பு ஆகியவற்றைத் தனித்தனியே மூன்று மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
2. கம்பை மிருதுவாகவும், அரிசியை ரவை போன்றும் அரைத்தெடுக்கவும்.
3. உளுத்தம்பருப்பை தண்ணீர் தெளித்து பொங்கப் பொங்க ஆட்டி எடுக்கவும்.
4. அரைத்த மாவை ஒன்றாகச் சேர்த்து, அதில் தேவையான உப்பு சேர்த்துக் கலந்து 5 முதல் 6 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும்.
5. மாவு புளித்த பின்பு, அம்மாவை இட்லித்தட்டில் இட்லிகளாக ஊற்றி வேக வைத்தெடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.