பீட்ரூட் தோசை
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கேழ்வரகு மாவு - 1 கப்
2. உளுத்தம் பருப்பு மாவு (ஆட்டியது) - 1/4 கப்
3. துருவிய பீட்ரூட் - 1/4 கப்
4. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
5. எண்ணெய் - தேவையான அளவு
6. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. இரவில் கேழ்வரகு மாவு, ஆட்டிய உளுத்தம் பருப்பு மாவு, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.
2. காலையில், அம்மாவைத் தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும்.
3. பீட்ரூட், பச்சை மிளகாயைத் தனித்தனியாகப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு போட்டுத் தாளித்து, நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், பீட்ரூட் சேர்த்து நன்கு வதக்கவும்.
5. வதக்கிய பீட்ரூட் மற்றும் மிளகாயை மாவில் சேர்த்துக் கலக்கவும்.
6. மாவைத் தோசைக்கல்லில் மெல்லிய தோசைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவிடவும்.
7. வெந்ததும் தோசையைத் திருப்பிப் போட்டு மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.