மைதா தோசை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. மைதா மாவு - 1 கப்
2. பச்சரிசி மாவு - 3/4 கப்
3. சின்னவெங்காயம் - 15 எண்ணம்
4. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
5. மிளகு - 10 எண்ணம் - சிறிது
6. கடுகு - 1/2 தேக்கரண்டி
7. சீரகம் - 1/4 தேக்கரண்டி
8. கறிவேப்பிலை - சிறிது
9. மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - சிறிது
10. உப்பு - தேவையான அளவு
11. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. வெங்காயத்தைப் பொடியாகவும், பச்சை மிளகாயைச் சிறு வளையங்களாகவும் நறுக்கி வைக்கவும்.
2. மிளகைப் பொடித்து வைக்கவும்.
3. மைதா, பச்சரிசி மாவு, உப்பு ஆகியவற்றுடன் தேவையான தண்ணீர் சேர்த்து ரவா தோசைக்குக் கரைப்பதுபோல் கரைத்துக் கொள்ளவும்.
4. வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, சீரகம், மிளகு போட்டுத் தாளித்து, அதனுடன் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
5. வதக்கியவற்றை மாவில் சேர்த்துக் கலக்கவும்.
6. அத்துடன் மல்லித்தழை சேர்த்துக் கலக்கவும்.
7. தோசைக் கல்லில் மாவை எடுத்து அள்ளித் தெளித்த மாதிரி தோசையாக ஊற்றி எண்ணெய் விட்டு, ஒருபுறம் வெந்ததும், மறுபுறம் திருப்பிவிட்டு எண்ணெய் விட்டு நன்றாக மொறுமொறுப்பாகச் சிவக்க வேகவைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.