காளான் தோசை
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. காளான் - 200 கிராம்
2. தோசை மாவு - தேவையான அளவு
3. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
4. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
5. கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு
7. எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிப் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
2. வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய காளான் சேர்த்து வதக்கவும்.
3. அதனுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத் தூள், உப்பு சேர்த்து வதக்கி மிதமான நெருப்பில் வைத்து வேக வைக்கவும்.
4. தோசைக் கல்லில் மாவை ஊற்றி தோசையாக வார்த்து, அதன் மேல் காளானை பரப்பி வேக வைக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.