காலிஃப்ளவர் மசாலா தோசை
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. தோசை மாவு – 200 கிராம்
2. மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
3. இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
4. காலிஃப்ளவர் (பொடியாக நறுக்கியது) - 100 கிராம்
5. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
6. மஞ்சள்தூள் – சிறிது
7. பெரிய வெங்காயம் – 100 கிராம்
8. தக்காளி – 1 எண்ணம்
9. உப்பு - தேவையான அளவு
10. எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும்.
3. அதனுடன் நறுக்கி வைத்த காலிஃப்ளவரையும் சேர்த்து வதக்கவும்.
4. அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும்.
5. அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கிளறி, மிதமான நெருப்பில் நன்கு வேகவைத்து இறக்கவும்.
6. தோசைக்கல்லைச் சூடாக்கி, மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விடவும்.
7. தோசை மாவின் மேல், தயார் செய்து வைத்த காலிஃப்வளர் மசாலாவை வைத்துப் பரவலாகத் தேய்த்து தோசையை மூடி வேகவிட்டு எடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.