ஆப்பம்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 300 கிராம்
2. உளுந்தம்பருப்பு - 2 மேசைக்கரண்டி
3. வெந்தயம் - 1 தேக்கரண்டி
4. சோடா உப்பு - சிறிது
5. சீனி - 1 தேக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. அரிசி,உளுந்து, வெந்தயம் சேர்த்து நன்கு சுத்தம் செய்து சுமார் 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. ஊறவைத்த அரிசியைத் தண்ணீர் வடித்து நன்கு அரைத்து எடுக்கவும்.
3. அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் உப்பு, சோடா உப்பு, சீனி சேர்த்துப் பிசைந்து மூடி வைக்கவும்.
4. மறுநாள் காலையில் (சுமார் 10 மணி நேரம் கழித்து) மாவு சிறிது பொங்கி இருக்கும். அதை நன்கு கலக்கவும்.
5. மாவில் சிறிது தண்ணீர் ஊற்றித் தோசை மாவை விடச் சிறிது இளக்கமாகக் கரைத்துக் கொள்ளவும்.
6. அடுப்பில் ஆப்பச் சட்டியினை வைத்து நன்கு சூடேறியதும் அதில், ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றிச் சட்டியின் கைப்பிடியைப் பிடித்து மாவு வட்டமாகப் பரவும்படி இலேசாக சாய்த்துச் சுற்றவும்.
7. ஆப்பம் நன்கு வெந்ததும் கரண்டியைக் கொண்டு ஓரமாக சுற்றி எடுத்தால் எளிதாக மேலே வந்து விடும்.
குறிப்பு:
ஆப்பத்திற்குத் சர்க்கரை கலந்த தேங்காய்ப்பால் சுவையாக இருக்கும். காரம் விரும்புபவர்கள் சட்னி, சாம்பார் அல்லது குருமா என்று தேவையானதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.