அவசர அவல் தோசை
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கெட்டி அவல் - 1 கிண்ணம்
2. புளித்த மோர் - சிறிதளவு
3. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
4. எண்ணெய் - தேவையான அளவு
5. உப்பு - தேவையான அளவு
6. பெருங்காயத்தூள் - சிறிது
செய்முறை:
1. அவலை நன்றாகச் சுத்தம் செய்து மோரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
2. பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் பொடியாக ஒரு சுற்றுச் சுற்றி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
3. பச்சைமிளகாயை பொடியாக அரிந்து மாவில் சேர்த்து, தோசைமாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.
5. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் மாவைத் தோசையாக வார்த்து இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
குறிப்பு:
புளிப்பு மோர் இல்லையெனில், எலுமிச்சம் பழச் சாறு சேர்த்த தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.