வெல்லத் தோசை
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. தோசை மாவு - 1 கோப்பை
2. வெல்லம் - 1 கோப்பை
3. ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி
4. தேங்காய்த் துருவல் - 1/2 கோப்பை
5. நெய் - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தோசை மாவு மற்றும் வெல்லம், ஏலப்பொடி,தேங்காய்த் துருவல் என்று அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும்.
2. சிறிது நேரம் கழித்து, தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடு செய்யவும்.
3. தோசைக்கல் சூடான பின்பு, அதில் சிறிது நெய் ஊற்றி, அதில் மாவைக் கரண்டியில் எடுத்துத் தோசையாக வார்க்கவும்.
4. தோசை மேல் நெய் விட்டு இருபக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.