மசாலா தோசை
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. இட்லி அரிசி – 1 /2 கப்
2. பச்சை அரிசி – 1 /2 கப்
3. உளுத்தம்பருப்பு – 1 /4 கப்
4. வெந்தயம் – 1 தேக்கரண்டி
5. உப்பு – தேவைக்கேற்ப
6. எண்ணெய் – 100 மில்லி
மசாலாவிற்குத் தேவையான பொருட்கள்
7. உருளைக்கிழங்கு – 100 கிராம்
8. வெங்காயம் – 50 கிராம்
9. தக்காளி(சிறியது) – 1 எண்ணம்
10. இஞ்சி, பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
11. கறிவேப்பிலை – 1 கொத்து
12. மல்லித்தழை – 1 மேசைக்கரண்டி
13. பச்சை மிளகாய் – 3 எண்ணம்
14. மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
15. கடுகு – 1 தேக்கரண்டி
16. உப்பு – தேவையான அளவு
17. எண்ணெய் – 50 கிராம்
செய்முறை:
மாவு அரைத்தல்
1. அரிசியை ஊற வைத்து நன்கு கழுவி அரைக்கவும்.
2. உளுந்து, வெந்தயத்தை ஊறவைத்து கழுவி நன்கு அரைக்கவும்.
3. அரிசி மாவு, உளுந்து மாவு மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலக்கி புளிக்க வைக்கவும்.
மசாலா தயாரித்தல்
1. உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும்.
2. வெங்காயம், தக்காளி , பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. மல்லித்தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்துத் தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
5. அதில் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
6. பின்னர் தக்காளி, பச்சை மிளகாய், மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
7. அதன் பிறகு வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து, சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து கட்டியாகும் வரை வதக்கவும்.
தோசை வார்த்தல்
1. அடுப்பில் தோசைக்கல்லில் போட்டுச் சூடானதும் அதில் தோசை மாவை ஊற்றி மூடி போட்டு வேக விடவும்.
2. தோசை வெந்ததும் அதில் உருளைக்கிழங்கு மசாலாவை வைக்கவும்.
3. தோசையைத் திருப்பி போடாமல் மசாலாவுடன் சேர்த்து இரண்டாக மடக்கி எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.